போடு வெடிய...! இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.2,360 சரிவு..! வெள்ளி விலையும் ரூ.10,000 குறைந்தது! மகிழ்ச்சியில் துள்ளும் நகைப்பிரியர்கள்..!!!



gold-silver-price-fall-november-25

கடந்த 2 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை மாற்றமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 வரை சரிந்துள்ளது. இதனால் நகை வாங்க காத்திருப்போருக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

சவரனுக்கு ரூ.2,360 சரிந்த தங்கம்

இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,420 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாறுமாறாக குறையும் தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைவு... துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்..!!!

இதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.12,458-க்கும், ஒரு சவரன் ரூ.99,664-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடி சரிவு

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 சரிந்து ரூ.165 ஆக உள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று ஒரே நாளில் சரிந்துள்ளதால், நகை வாங்குவோர் மத்தியில் இந்த விலை மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: தாறுமாறாக குறையும் தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைவு... துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்..!!!