சினிமா

பேட்ட பராக்! பட்டைய கிளப்பும் பேட்ட ட்ரெய்லர் உள்ளே

Summary:

Watch Petta trailer released now

ரஜினியின் பேட்ட படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ரஜினியின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியானது. மேலும் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு படத்தை ப்ரோமோட் செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். 

சில நாட்களுக்கு முன்பு தனிக்கைகுழு பேட்ட படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் படத்தில் சில் காட்சிகளை தனிக்கைக்குழு நீக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும் பேட்ட படத்தின் டிரைலர் இன்று 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.  பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ட்ரெய்லரை 10:25 மணிக்கே வெளியாகும் என அறிவித்தது. அதன்படி ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 


Advertisement