தமிழகம் சினிமா

3 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட அறைக்கதவு.. சித்ரா தூக்கில் தொங்கிய மின்விசியை பிடித்து கதறி அழுத தாய்.. கண்கலங்கவைக்கும் காட்சிகள்..

Summary:

நடிகை சித்ரா கடைசியாக தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் சென்ற அவரது தாய் கதறி அழுத வீடியோ காட

நடிகை சித்ரா கடைசியாக தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் சென்ற அவரது தாய் கதறி அழுத வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. சித்ரா என்பதை விட, இவர் நடித்த முல்லை என்ற கதாபாத்திரம்தான் மக்கள் மத்தியில் இவரை இன்றுவரை நினைவில் வைத்திருக்க காரணமாக உள்ளது.

இந்நிலையில் தனது கணவன் மூலம் ஏற்பட்ட மனஅழுத்ததால் நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூந்தமல்லியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

பின்னர் சித்ரா மற்றும் அவரது கணவர் ஹேம்நாத் தங்கியிருந்த ஹோட்டல் அறையை போலீசார் பூட்டி சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இந்நிலையில் சித்ரா இறந்து ஏறக்குறைய மூன்று மாதங்கள் ஆகிவிட்டநிலையில், தற்போது போலீசார் சித்ரா கடைசியாக தங்கியிருந்த அறையில் உள்ள பொருட்களை எடுத்துச்செல்ல சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அறைக்குள் சென்ற அவரது தாய், சித்ரா தற்கொலை செய்து கொண்ட மின்விசிறியை பார்த்ததும் கதறித் துடித்தார். மேலும் அங்கிருந்த சித்ராவின் பொருட்களை கையில் எடுத்துவைத்துக்கொண்டு கட்டிலில் அழுது புரண்டார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தநிலையில், தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Credits: https://tamil.behindwoods.com/

Video link: https://youtu.be/lU79zklr-A4


Advertisement