சினிமா

விஸ்வாசம் படத்தில் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது...!

Summary:

viswasam-movie-new-announcement

விஸ்வாசம் படத்தில் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது...! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித்குமார் தற்போது நடித்து வரும் படம் "விசுவாசம்". இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்குகிறார். இவர்கள் இருவரும் 4 ஆவது முறையாக இணைந்து படம் பண்ணுவது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் இருவரும் பில்லா, ஏகன், ஆரம்பம் மற்றும் தற்போது விசுவாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையாவும் இரண்டு வேடங்களில் நடிக்கின்றார்.  இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்கிறார். 

இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு, அஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. .  இந்நிலையில் இந்த  படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியிட இருப்பதாக  தகவல்கள் வெளிவந்துள்ளது.  இது இந்த படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement