சினிமா

ஊர் ஊராக செல்லவிருக்கும் விஷ்ணு விஷால்! ஓ.. எல்லாம் எதற்காக தெரியுமா? வெளிவந்த தகவல்!!

Summary:

ஊர் ஊராக செல்லவிருக்கும் விஷ்ணு விஷால்! ஓ.. எல்லாம் எதற்காக தெரியுமா? வெளிவந்த தகவல்!!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்த படத்தை தொடர்ந்து அவர் ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மனு ஆனந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் FIR. 

இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் பெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதனை மேலும் அதிகப்படுத்த, விஷ்ணு விஷால் புதிய முயற்சியை மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது.

அதாவது தனது திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்கு முன்னே அறிவிப்பு வெளியிட்டு சென்று ரசிகர்களுடன் படம் பார்க்க உள்ளாராம். மேலும் அவரைப் பார்க்கவே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் கூடும், அதனால் வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் முதல் ஊராக கோயம்புத்தூருக்கு சென்று தியேட்டரில் படம் பார்க்க உள்ளதாகவும், பின்னர் அடுத்தடுத்த நாள் மற்ற திரையரங்கிற்கு செல்ல முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement