வாவ்.. குக் வித் கோமாளி பிரபலங்களுடன் இருக்கும் பிரபல முன்னணி மாஸ் ஹீரோ! அட.. யார்னு பார்த்தீங்களா!Vishal with cook with comali fame photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களின் சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையில், அதனையே இடையில் கோமாளிகளை டிஸ்டர்ப் செய்ய விட்டு பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வந்தது. 

இதன் முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. இந்த சீசனில் போட்டியாளர்களாக கனி,பாபா பாஸ்கர், அஸ்வின், ஷகிலா, தீபா, தர்ஷா, மதுரை முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் கோமாளிகளாக சிவாங்கி, பாலா, புகழ், மணிமேகலை, சுனிதா, சரத், தங்கதுரை என பலரும் கலந்து கொண்டு ரகளைகள் செய்து வந்தனர்.

vishal

இவ்வாறு கலகலப்பாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. அதில் தனது அசத்தலான சமையலால் கனி வெற்றியாளர் ஆனார். இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ், பாலா, ஷிவாங்கி மற்றும் ராமர் ஆகியோர் அண்மையில் முன்னணி நடிகரான விஷாலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.