சினிமா

கொரோனோ ஊரடங்கால் ரேணிகுண்டா படநடிகருக்கு நேர்ந்த பரிதாபம்! தேடிவந்து உதவிய திரைப்பிரபலங்கள்!

Summary:

Vishal, sreeman helps to theepetti ganesan

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், சினிமா துறையில் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலை இல்லாமல் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதியளித்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில்  படப்பிடிப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த ரேணிகுண்டா, பில்லா-2 போன்ற படங்களில் நடித்த தீப்பெட்டி கணேசனுக்கு நடிகர் விஷால், ஸ்ரீமன்,  பிரேம்குமார் மற்றும் பூச்சி முருகன் உள்ளிட்ட நடிகர்கள் உதவி செய்துள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் தீப்பெட்டி கணேசன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, நான் தீப்பெட்டி கணேசன். ரேணிகுண்டா படத்தில் நடித்துள்ளேன். கொரோனா  பிரச்சினையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். அதை நடிகர் பிரேம் குமார், நடிகர் பூச்சி முருகனிடம் கூறி, அவர் எனக்கு உதவினார். மேலும் நடிகர் விஷால் மற்றும் என் சினிமா நண்பர்கள் அனைவரும் எனக்கு தேவையான வீட்டு பொருட்களை வாங்கி கொடுத்தனர். இந்த நேரத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் நடிகர் ஸ்ரீமன் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் என தொலைபேசியில்  தெரிவித்துள்ளார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்


Advertisement