நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
பிரபல தயாரிப்பாளர் மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்! ஏன், என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் பல மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்க கூடியவர் நடிகர் விஷால். இவர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ஏராளமான படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பி.சௌத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது இரும்புத்திரை படத்தயாரிப்புக்காக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் விஷால் கடன் வாங்கியுள்ளார். மேலும் அதற்காக அவர் தனது வீட்டுப் பத்திரம் மற்றும் உறுதிமொழி பத்திரங்கள் போன்ற சிலவற்றை ஆவணங்களாக கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு நடிகர் விஷால் தான் வாங்கிய கடனை திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் கடனை திருப்பி அளித்த பிறகும் ஆர்.பி.சௌத்ரி தனது உறுதிமொழி பத்திரங்களையும், ஆவணங்களையும் திருப்பித் தராமல் இழுத்தடிக்கின்றார். மேலும் தொலைந்து விட்டதாகவும் கூறுகின்றனர். இதனை வைத்து பின்பு மோசடி செய்ய வாய்ப்பிருக்கிறது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.