சினிமா

ஓடிடியில் வெளியாகவிருந்த விஷாலின் சக்ரா படத்திற்கு வந்த சிக்கல்! சென்னை உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

Summary:

Vishal chakra OTT sale banned by highcourt

தமிழில் இயக்குனர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் தயாரித்து, நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், தீபாவளியை முன்னிட்டு ஓடிடிதளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் நடிகர் விஷாலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் எங்களது நிறுவனம் தயாரிப்பில் விஷால் ஆக்‌ஷன் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்பொழுது அவர் இப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதால் 8.29 கோடி ரூபாயை திருப்பித் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை விஷால் நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் ஆனந்தன் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு கூறி ஒப்பந்தம் செய்த கதையையே நடிகர் விஷால் தனது நிறுவனத்தின் மூலம் சக்ரா என்ற பெயரில் தயாரித்துள்ளார். எனவே சக்ரா திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சுமூக தீர்வுகாண வேண்டும் எனவும்,  அதுவரை சக்ரா திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Advertisement