விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.! செம மாஸாக விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா!! புகைப்படம் இதோ..



vinayagar chadurthi fan celebration by bigil fans

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

vijay

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் சிங்கப்பெண்ணே, மற்றும்  ஏ. ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் பிகில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் அமர்ந்திருப்பது போன்று விநாயகர் சிலையை வடிவமைத்து அவற்றை பூஜை செய்து விநாயகர்  சதுர்த்தி விழாவை கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

vijay