அஜித், விஜய்யின் வில்லனுக்கு இப்படியொரு சோகமான நிலைமையா? வேதனையில் மூழ்கிய ரசிகர்கள்.!
அஜித், விஜய்யின் வில்லனுக்கு இப்படியொரு சோகமான நிலைமையா? வேதனையில் மூழ்கிய ரசிகர்கள்.!

தமிழசினிமாவில் அஜித், விஜய், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து வில்லன் வேடங்களில் நடித்தவர் நடிகர் சம்பத் ராம்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள என பல மொழி திரைப்படங்களிலும் வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். மேலும் தற்போது தட்றோம் தூக்குறோம், ‘காஞ்சனா 3 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.
இந்நிலையில் அவர் தற்போது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் ராணாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ராணாவுடன் சம்பத் ராம் மோதும் சண்டைகாட்சி படமாக்கப்பட்டது.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சம்பத் ராம் நெத்தியில் பயங்கரமாக அடிபட்டது.
அதனை தொடர்ந்து படகுழுவினர் அவருக்கு முதலுதவி கொடுத்தனர்,. பின்னர் சம்பத்ராம் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு பிறகு அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.அப்பொழுது அவரது தலையில் இரத்தம் கட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தலையில் ஏற்பட்ட இரத்த உறைதல் சரி செய்யப்பட்டுள்ளது
மேலும் இன்னும் சில தினங்களில் ஓய்விற்கு பிறகு சம்பத்ராம் எப்போதும் போல படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளார்.