சினிமா

ஷூட்டிங்கிற்காக சென்ற படக்குழுவை ஊருக்குள் வரவிடாமல் தடுத்த கிராம மக்கள்! அதுவும் எதனால் தெரியுமா? பரபரப்பு சம்பவம்!

Summary:

கொரனோ அச்சம் காரணமாக பொள்ளாச்சி கிராமத்தினர் காகிதப்பூக்கள் படக்குழுவினரை ஊருக்குள் வரவிடாமல் தடுத்துள்ளனர்.

ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் திரைப்படம் காகிதப்பூக்கள். இந்த படத்தை முத்து மாணிக்கம் இயக்கி தயாரிக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் புதுமுகங்கள் லோகன் மற்றும் அவருக்கு ஜோடியாக பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அவர்களுடன் தில்லை மணி, தவசி, பாலு, ரேகா சுரேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் பயத்தின் காரணமாக கிராம மக்கள் கட்டுப்பாடு விதித்து படக்குழுவை ஊருக்குள் வர விடாமல் தடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தயாரிப்பு குழு திண்டுக்கல் அருகேயுள்ள செம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கு அனுமதி பெற்று முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குனர் முத்துமாணிக்கம் கூறுகையில், கொரோனா டெஸ்ட் எடுத்து மருத்துவர் சான்றுடன் சென்ற போதும், படப்பிடிப்பை நடத்த விடாமல் கிராம மக்கள் தடுத்தது அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவோ கூறியும் அவர்கள் கேட்கவில்லை. பின்னரே திண்டுக்கல் அருகே செம்பட்டி கிராமத்திற்கு சென்று அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினோம். படம் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.


Advertisement