தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
விக்ரம் பட நடிகையின் விவகாரமான பிகினி ஷூட்.! காயத்ரிமா நீ வேற லெவல்ம்மா.!
தென்னிந்திய திரைப்பட நடிகையான காயத்ரி சங்கர் தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2012ஆம் ஆண்டு வெளியான 18வயசு திரைபடத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
மேலும் காயத்ரி பொன்மாலை பொழுது, சித்திரம் பேசுதடி, உலா, புரியாத புதிர், ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
காயத்ரி சங்கர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் குடும்ப பாங்காகவே இருக்கும். இதுபோன்ற நிலையில், காயத்ரியின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்படி எப்போதும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வரும் காயத்ரி தற்போது உள்ளாடைகள் மட்டுமே அணிந்து கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த இவரது ரசிகர்கள் காயத்ரியை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.