சூப்பர்.. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விக்ரமின் கோப்ரா! அதுவும் எப்போ? எந்த டிவியில் தெரியுமா??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் வில்லனாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளாராம். நடிகர் விக்ரம் பலவித கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கோப்ரா படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, கோப்ரா படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளதாகவும், படம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.