நல்ல மனுஷன்.. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு! மிகுந்த வேதனையுடன் நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட பதிவு!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் இத்தகைய கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி, இயக்குனர் கேவி ஆனந்த், தாமிரா
நிதிஷ் ராணா, இயக்குனர் அருண் காமராஜாவின் மனைவி, பாடகர் கோமகன், கில்லி பட நடிகர் மாறன் உள்ளிட்ட பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சில படங்களிலும், மேலும் சின்னத்திரை தொடர்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கட் சுபா. இவர் சினிமா விமர்சகரும் ஆவார். இந்தநிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
— Vijayakant (@iVijayakant) May 29, 2021
மறைந்த வெங்கட் சுபா அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடிய ஒரு இனிமையான மனிதர். மேலும், சினிமா உலகில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது#RipVenkatsubha pic.twitter.com/sMvwXNKX64
ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கட் சுபா இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் வெங்கட் சுபாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மறைந்த வெங்கட் சுபா அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடிய ஒரு இனிமையான மனிதர். மேலும், சினிமா உலகில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது என பதிவிட்டுள்ளார்.