சினிமா

90-களில் சினிமாவை கலக்கிய லேடி சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்திக்கு இவ்வளவு சம்பளமா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

vijayasanthin salary 5 croce

சினிமா உலகில் நயன்தாராவிற்கு முன்பு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. இவர் ஏராளமான ஆக்சன் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர்களுக்கு இணையாக சண்டைக்காட்சிகளில் மிரட்டியுள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவரது படத்திற்கெனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் ஈடுபட்டார்.

தொடர்புடைய படம்

முதலில் 1988 இல் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட விஜயசாந்தி பின்னர் விலகி 2004 ல் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விஜயசாந்தியை தெலுங்கானா மாநிலத்தின் ஸ்டார் பிரச்சாரகராக நியமனம் செய்தார்.

இந்நிலையில் மீண்டும் சினிமா துறையில் கால் பதித்துள்ளார்.தற்போது தெலுங்கு நடிகர் மகேஸ்பாபு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.அந்த படத்திற்க்காக அவர் 5 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் 53 வயதில் இவருக்கு இவ்வளவு சம்பளமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement