சினிமா

விஜய் டிவி பிரபலத்திற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. வைரலாகும் வீடியோ..

Summary:

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் தொடர் மூலம் பிரபலமான பாடகி நித்ய ஸ்ரீ படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் தொடர் மூலம் பிரபலமான பாடகி நித்ய ஸ்ரீ படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உண்டு. அதேபோல் இந்த நிகழ்ச்சி மூலம் சினிமாவில் பிரபலமான கலைஞர்களும் ஏராளம். இன்று தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர்களில் பலரை உருவாக்கிய பெருமை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உண்டு.

இந்த நிகழ்ச்சி மூலம் இன்று பிரபல பாடகிகளில் ஒருவராக இருப்பவர் நித்ய ஸ்ரீ. நித்ய ஸ்ரீ ஆல்பம் ஷூட்டிங் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அவருடன் இருக்கும் கலைஞர்கள் சிலர் அவரை மேலே தூக்கி போடுவதுபோன்றும், அவர் மேலே உள்ள கம்பியை பிடிப்பதுபோன்றும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது இளைஞர்கள் சிலர் நித்யஸ்ரீயை மேலே தூக்குபோடும்போது அவர் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement