குக் வித் கோமாளி இனி அவ்வளவுதானா.! முன்னணி நடிகையுடன் இணையும் விஜய் தொலைக்காட்சி ரக்சன்.?

குக் வித் கோமாளி இனி அவ்வளவுதானா.! முன்னணி நடிகையுடன் இணையும் விஜய் தொலைக்காட்சி ரக்சன்.?



 Vijay tv rakshan commitment a movie with keerthy suresh


விஜய் தொலைக்காட்சிகள் பிரபலமான தொகுப்பாளராக வலம் வருபவர் ரக்சன். இவர் முதன் முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவராக அறியப்பட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவரது பேச்சிற்காகவே இவருக்கு ரசிகை கூட்டங்கள் பலர் இருக்கின்றனர்.

vijay tv

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான ,'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் மிகப்பெரும் ஹிட்டாகி தமிழ் சினிமாவில் பெயர் பெற்று தந்தது.

இதன் பின்பு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இது போன்ற நிலையில், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து 'கன்னிவெடி' எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்

vijay tv

'மாமன்னன்' திரைப்படத்திற்கு பின்பு கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கும் 'கன்னிவெடி' திரைப்படத்தில் ரக்சன் ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்திருக்கிறது. இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதனையடுத்து ரக்ஷன் குக் வித் கோமாளியிலிருந்து விலகி விட்டாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.