விஜய் டிவி ராமரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

விஜய் டிவி ராமரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?


Vijay tv raamar early life history

மாபெரும் கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த பெருமை விஜய் தொலைக்காட்சிக்கு உண்டு. சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம் என பலரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர்கள்தான். தற்போது அந்த வரிசையில் ராமர் இடம்பெற்றுள்ளார்.

என்னமா இப்படி பன்றிங்களேமா என்ற ஒற்றை வசனம் மூலம் இன்று விஜய் தொலைக்காட்சியின் செல்ல பிள்ளையாக மாறியுள்ளார் ராமர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராமர் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை. மேலும் ஆத்தாடி என்ன உடம்பி என்ற பாடல் மூலம் நாம் அனைவரையும் சிரிக்க வைத்தார் ராமர்.

vijay tv

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜோடி நிகழ்ச்சியில் ராமர் பங்கேற்றுவருகிறார். இதுநாள் வரை மக்களை சிரிக்க வைத்த ராமரை மட்டுமே நமக்கு தெரியும். ஆனால், சமீபத்தில் ராமரின் சோகமான பக்கமும் தெரியவந்துள்ளது. ராமர் தற்போது ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். சம்பத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருந்து. அதில்  தனது கடந்த கால கஷ்டங்களை எண்ணி கண்ணீர் வடித்தார் ராமர்.

ராமரின் சோகத்தை கேட்ட அங்கிருந்த அனைவரும் சோகத்தில் கண்கலங்கினார்.