பாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லை வந்தாச்சு.. புதிய முல்லையின் தோற்றமும், குரலும் எப்படி இருக்கு பாருங்க..vijay-tv-pandiyan-stores-new-mullai-entry

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக காவ்யா நடித்துள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்துவந்த நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தனியார் நடச்சத்திர விடுதி ஒன்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். சித்ராவின் இந்த தற்கொலை இன்றுவரை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது ஒன்றாகவே உள்ளது.

VJ Chitra

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி முல்லையாக யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துவரும் காவ்யாதான் முல்லையாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக காவ்யா நடித்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. மறைந்த நடிகை சித்ராவுக்கு பின்னணி குரல் கொடுத்த அதே பெண் தற்போது கவியாவுக்கு குரல் கொடுத்துள்ளார். அந்த குரலையும், கவியாவையும் பார்க்கும்போது அப்படியே சித்ராவை பார்ப்பதுபோல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.