பிக்பாஸ் வீட்டுக்குள் போறதுக்கு முன்பே இப்படி ஒரு பதிவா? வைரலாகும் விஜய் டிவி பகல்நிலவு நாயகனின் இன்ஸ்டா பதிவு

பிக்பாஸ் வீட்டுக்குள் போறதுக்கு முன்பே இப்படி ஒரு பதிவா? வைரலாகும் விஜய் டிவி பகல்நிலவு நாயகனின் இன்ஸ்டா பதிவு


Vijay tv pakal nilavu azeem viral instagram post

விஜய் டிவி பகல் நிலவு சீரியல் நடிகர் அசீம் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடரில் நாயகனாக நடித்தவர் அசீம். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக ஷிவானி நடித்திருந்தார். இந்த தொடர் முடிவுபெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்தனர்.

இந்நிலையில்தான் அசீம் - ஷிவானி இருவரும் காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது. அசீம் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் நடிகை ஷிவானி பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுவரும் நிலையில் நடிகர் அசீம் விரைவில் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் எண்ட்ரியாக செல்ல இருப்பதாக சிலர் கூறிவருகின்றனர்.

Shivani

இந்நிலையில், சமீபத்தில் அசீம் தனது சமூக வலைதளபாகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகிவருகிறது. "100 சிங்கங்களை 1 நாய் வழிநடத்தினால் சிறுபடை வந்தாலும் அச்சிங்கங்கள் அனைத்தும் நாயாகிவிடும். இதே 100 நாய்களை 1 சிங்கம் வழிநடத்தினால் பெரும்படையே வந்தாலும் அந்நாய்கள் அனைத்தும் சிங்கங்களாய் உருவெடுக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் பாலாஜி - ஷிவானி இடையே காதல் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போனால் நன்றாக இருக்கும் எனவும், பாலாஜியை அடக்க நீங்கதான் சரியா ஆள் எனவும், பிக்பாஸ் வீட்டிற்குள் போறதுக்கு முன்பே இப்படி ஒரு பதிவா என பலவிதமாக கமெண்டுகளை பதிவிட்டுவருகின்றனர்.