விஜய் டிவி மௌனராகம் கார்த்திக் யார் தெரியுமா? அவரைப்பற்றிய சில சுவாரசிய தகவல்கள்.

Vijay Tv Mouna Ragam Karthi full details in tamil


vijay-tv-mouna-ragam-karthi-full-details-in-tamil

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. சக்தி என்ற குழந்தையை மையமாக வைத்து இந்த தொடர் ஓடிவருகிறது. சக்தி என்ற அந்த குழந்தைக்கு அப்பாவாகவும், பிரபல பாடகராகவும் கார்த்திக் கிருஷ்ணா என்ற கதாபாரத்தில் ஒருவர் நடித்துவருகிறார்.

அவர் யார்? அவரது உண்மையான பெயர் என்ன? மேலும் அவரைப்பற்றிய சில சுவாரசிய தகவல்களை இங்கே பார்ப்போம்.

ராஜேஷ் பரமேஸ்வர் என்பதுதான் அவரது உண்மையான பெயர். கேரளா மாநிலம் திரிசூரை பூர்விகமாக கொண்ட இவர் பல்வேறு மலையாள சீரியல்களிலும், ஒருசில படங்களிலும் நடித்துள்ளார்.

Mouna raagam

படங்களில் நடிப்பதற்கு முன்னர் பிரபல கை கடிகாரம் ஒன்றின் விளம்பரத்தில் மாடலாக நடித்துள்ளார் ராஜேஷ் பரமேஸ்வர். மேலும், வித்யா பாலன் மற்றும் பூர்ணிமா இந்திரஜித் ஆகியோருக்கு ஜோடியாக மாடலிங் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

பின்னர் சினிமா, சீரியல்களில் வந்த இவருக்கு பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரமே கிடைத்துள்ளது. காட்சிகளில் இவரது வில்லத்தனமான நடிப்பை பார்த்து நிஜத்தில் அவரை ரசிகர்கள் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளது.

Mouna raagam

அதன்பின்னர் நடிப்பை விட்டுவிட்டு துபாய்க்கு வேலை தேடி சென்ற இவர் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

மற்ற சீரியல்கள் போல் வில்லனாக இல்லாமல், ஹீரோவாக, பலரின் மனதை கவர்ந்த நடிகராக நடித்து அனைவரையும் கவர்ந்துவருகிறார் கார்த்தி என்னும் ராஜேஷ் பரமேஸ்வர்.