சினிமா

விரைவில் 2வது திருமணம்..! 4 வருட காதல் கணவனை சீரியல் கணவனுக்காக விவாகரத்து செய்த விஜய் டிவி நடிகை.! அந்த நடிகர்தான் காரணமா.?

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மேக்னா வின்சென்ட் . கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

சீரியலில் பிரபலமான இவர் டான் டோனி என்பவரை நான்கு வருடங்களாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து ஒரு ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே வாழத்தொடங்கினர்.

தற்போது இருவரும் முறைப்படிவிவாகரத்து பெற்றுள்ளனர். இதனை அடுத்து டான் டோனி இரண்டவது திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், நடிகை மேக்னாவும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது அவர் நடித்துவரும் பொன்மகள் வந்தால் தொடரில் அவருக்கு கணவனாக, தொடரின் நாயகனாக நடித்துவரும் விக்கி க்ரிஷ் என்பவருக்கும், மேக்னாவுக்கும் இடையே ஏற்கனவே காதல் சர்ச்சை எழுந்த நிலையில், அதனால்தான் மேக்னா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டதால் மேக்னா விரைவில் விக்கியை இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது .


Advertisement