இந்த புகைப்படத்தில் இருக்கும் இரட்டை குழந்தைகள் நம் எல்லோரையும் ரசிக்கவைக்கும் விஜய் டிவி பிரபலம் ஒருவரின் குழந்தைகள்.!

இந்த புகைப்படத்தில் இருக்கும் இரட்டை குழந்தைகள் நம் எல்லோரையும் ரசிக்கவைக்கும் விஜய் டிவி பிரபலம் ஒருவரின் குழந்தைகள்.!


Vijay tv fame prajin twin babies

நடிகராகவும், பிரபல தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரஜின்.  இந்த புகைப்படத்தில் இருக்கும் இரட்டை குழந்தைகள் அவருடைய குழந்தைகள்தான்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்கநேரமில்லை என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ப்ரஜின். இந்த தொடர் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டை போன்ற ஒருசில படங்களில் முதன்மை வேடத்தில் நடித்தார். ஆனால், வெள்ளித்திரை இவருக்கு அதிகமான வரவேற்பை தரவில்லை.

prajin

இதனால் சின்னத்தம்பி என்ற தொடர் மூலம் மீட்டும் சின்னத்திரை பக்கம் வந்த இவர் தற்போது அன்புடன் குஷி என்ற தொடரில் நடித்துவருகிறார். இந்நிலையில், பிரபல தொகுப்பாளரும் நடிகையுமான சான்ட்ராவை கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார் ப்ரஜின்.

நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு ஒரு வருடங்களுக்கு முன்னர் மித்ரா, ருத்ரா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் பிறந்து தற்போது ஒரு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ப்ரஜின்.