கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

விஜய் தொலைக்காட்சியில் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் நெடுந்தொடர் ஈரமான ரோஜாவே. இதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 450 நாட்களை கடந்து நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது.
கடந்த 17 ஜனவரி 2022 முதல் இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் திரவியம் ராஜகுமாரன், கேப்ரியலா, சித்தார்த் குமரன், ஸ்வாதி கொண்டே, தீபக் குமார், ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், ஆர்த்தி ராம்குமார், மனோகர் கிருஷ்ணன், கிரு பாஜி, ப்ரீத்தி குமார் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பு செய்யப்படவுள்ள நிலையில், ஈரமான ரோஜாவே தொடரின் நேரம் இரவு 10 மணியில் இருந்து மதியம் ஒரு மணிக்கு மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பை விஜய் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.