சினிமா

சாய்ந்து படுத்து, இளைஞர்களை சாய்த்துப்போட்ட தர்ஷா குப்தா.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

Summary:

சீரியல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

சீரியல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

மும்பையை சேர்ந்த மாடல் அழகிதான் இந்த தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக கலக்கிவருகிறார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் தர்ஷா குப்தா.

இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். அதில்  அவருக்கு சிறந்த  வரவேற்பு  இல்லாததால், கிடைத்ததை வைத்து சினிமாவில் நுழைய அதிக கவனம் செலுத்தி  வருகிறார்.

சீரியலில் இவருக்கு ஓரளவிற்கு வரவேற்பு இருந்தாலும் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் காத்து கிடக்கின்றனர். அந்தவகையில் இவர், தலையில் கைவைத்து படுத்தபடி, அழகிய பொன்சிரிப்புடன் தேவதைபோல் குயூட் போஸ் கொடுத்துள்ளர். இந்த புகைப்படம் அவரது ரசிகர்களின் மனதை கிறங்கடித்து உள்ளது.


Advertisement