என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
என்னது.. மணிமேகலையை அவரது கணவர் மதம் மாற்றிவிட்டாரா?.. உண்மை இதுதான்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் கலக்கி வந்த மணிமேகலை, திடீரென அத்தொலைக்காட்சியில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து தொகுப்பாளராக பிற சேனலில் பணியாற்றிய அவர், மீண்டும் தொகுப்பாளராக விஜய் டிவிக்கு வந்துள்ளார்.
இவர் நடன கலைஞர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களை அவர் மதம் மாற்றிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த மணிமேகலை கூறுகையில்," எனக்கு எல்லா கடவுளும் ஒன்றுதான். அனைத்து கடவுளையும் நான் வணங்குகிறேன். மசூதிக்கு நாங்கள் சென்றதை விட ஜோடியாக கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்ட நிகழ்வு தான் அதிகம்" என்றார்.