சினிமா

இதைத்தானே எதிர்பார்த்தோம்!! ஏப்ரல் 18 விஜய் டிவியில.. ஒரே கொண்டாட்டம்தான்!! வைரலாகும் வீடியோ!!

Summary:

மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை கொடுக்கும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரி

மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை கொடுக்கும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்களையும, திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பி டிஆர்பியை எகிற வைத்து முன்னணி தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சி திகழ்ந்து வருகிறது. இதன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மாபெரும் வரவேற்பும், ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழா நடைபெறும். அதில் டிவி தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேடுத்துவரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பெருமைப்படுத்தி, கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றுள்ளது. மேலும் அதுகுறித்த சில புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது.

இந்த நிலையில் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்ச்சி டிவியில் ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement