மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களுக்காக வருத்தப்பட்டு என்ன பேசினார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.
இசைவெளியீட்டு விழாவில் என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு வணக்கம், என நடிகர் விஜய் பேச ஆரம்பித்தார். சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்க கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டமாக்க வேண்டும் என சிஏஏ குறித்து நடிகர் விஜய் மறைமுகமாக பேசியதாக கூறப்படுகிறது.
என்னுடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவை பார்க்க என்னுடைய ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்று நினைக்கும் பொழுது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் அதற்கு முழு காரணம் கொரானா வைரஸ் பரவ கூடாது என்பது தான் என்று கூறினார் நடிகர் விஜய்.
தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், இளைய தளபதியாக இருக்கும் போது ரைடு இல்லாமல் வாழ்க்கை அமைதியாக இருந்தது. உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும். என்ன நடந்தாலும் நமது வாழ்க்கையில் கடமையை செய்துகொண்டே தொடர்ந்து பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
விழாவில் நடிகர் விஜய்யின் தாய், ஷோபா பேசுகையில், காதலுக்கு மரியாதை பேபி பாடலும் மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலும் தனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் என்று கூறினார்.