புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சுபஸ்ரீ விவகாரம்.! விழா மேடையையே தெறிக்கவிட்ட பிகில் விஜய்யின் வெறித்தனமான பேச்சு.! கெத்து காட்டிய தளபதியால் பிரமித்துப்போன ரசிகர்கள்!!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே மற்றும் வெறித்தனம் மற்றும் உனக்காக வாழ நினைக்கிறேன் என்ற மூன்று பாடலும் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டியது.
இதனை தொடர்ந்து நேற்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்தநிலையில், அவர் பேசியதாவது, கால்பந்து போட்டிபோல்தான் வாழ்க்கை, நாம் கோல் போட்டால் அதை தடுக்க ஒரு கூட்டமே வரும்.நம்ம கூட இருக்கறவங்க கூட சேம் சைட் கோல் போடுவாங்க.
யாரோட பழைய அடையாளத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கென தனியாக ஒரு அடையாளத்தை உருவாக்கிகொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு புடிச்சா எட்டுக்கோங்க இல்லை என்றால் விட்டுவிடுங்கள். மேலும் உலகத்திலேயே உழைத்தவனை உயரமான மேடையில் ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி ரசிகர் மட்டுமே என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் விளையாட்டில் மேம்பட வேண்டுமென்றால் அரசியல் புகுந்து விளையாட்டு பண்ணுங்க விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. எது யாரால் முடியும் என பார்த்து அவர்களை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அதனை அவர்களது திறமையை வைத்து முடிவு பண்ணுங்க. எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் கருணாநிதி பற்றி தவறாக பேசிய வரை எம்ஜிஆர் காரிலிருந்து இறக்கி விட்டார் அதனை போல் இருக்க வேண்டும்
மேலும் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு எனது ஆறுதல்.இந்த விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர் மீது வழக்கு போட்டுள்ளனர். இது சரிதானா மேலும் இது போன்ற சமூகப் பிரச்சினைகளை கவனமெடுத்து ஹாஸ்டேக் போடுங்கள். சமூகவலைதளங்களில் மோதலில் ஈடுபட வேண்டாம் என விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்