
vijay-speaks-about-biggboss-show
பிக்பாஸ் பற்றி தளபதி விஜய் இப்படி பேசினார்...! வையாபுரி ஓபன் டாக்...!
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தற்சமயம் நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனையும் நடிகர் கமல்காசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் சீசன்1 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் சீசன்2 வையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி தற்சமயம் நிறைவடைந்துள்ளது...
பிக்பாஸ் சீசன்1 ன் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட பிக் பாஸ் சீசன் 2 நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இதன் வெற்றியாளராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல் சீசனில் கலந்துகொண்ட வையாபுரி தளபதி விஜய்யை சர்க்கார் படப்பிடிப்பின் போது சந்தித்துள்ளார். இதனையடுத்து அவர், பிக்பாஸ் நிகழ்ச்சிகள் எல்லாம் எப்படி போனது, குழந்தைகள் பார்க்கும் போது தானும் சேர்ந்து பார்ப்பதாக கூறினார் என்று வையாபுரி கூறியுள்ளார்.
Advertisement
Advertisement