சினிமா

ஒட்டுமொத்தத்தில் திரைத்துறையின் சிஸ்டம் சரியில்லை...! விஜய் சேதுபதி பேட்டி...!

Summary:

vijay-sethupathi-speech-on-vadapalani-press-meet

ஒட்டுமொத்தத்தில் திரைத்துறையின் சிஸ்டம் சரியில்லை...! விஜய் சேதுபதி பேட்டி...! 

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வெளியான படம் 96. இந்த படம்  கடந்த 4 ம் தேதி வெளியானது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இந்த படம் திரைக்கு வரும் முன்னரே சில பிரச்சனைகள் நடிகர் விஜய்சேதுபதிக்கும், நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. 

இந்நிலையில் இந்த பிரச்சனைகள் தொடர்பாக பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறியதாவது: 

இந்த சிக்கலுக்கு காரணம் விஷால். மேலும் இந்த படத்தின் அதிகாலை காட்சிகளை ரத்து செய்யப்பட்டது. மேலும் சதுரங்க விளையாட்டை தொடங்கியது நான் தான்., ஆனால் அந்த விளையாட்டில் சதுரங்க காய்களாக மாற்றப்பட்டேன் என்றும் தெரிவித்தார். இந்த பிரச்சனையில் நடிகர் விஷாலை குறை ஏதும் சொல்ல முடியாது., ஏனெனில் தாமே இந்த விவகாரத்தில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது சினிமா திரையில் அதை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. பொதுவாக சொன்னால் திரைத்துறையில் சிஸ்டம் சரியில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 


Advertisement