சினிமா

வாவ்!! சூப்பர் பெயரா இருக்கே!! ரசிகனின் குழந்தைக்கு அருமையான பெயர் வைத்த விஜய் சேதுபதி!! என்ன பெயர் தெரியுமா?

Summary:

ரசிகனின் குழந்தையை தூக்கி கொஞ்சி, அந்த குழந்தைக்கு அழகான பெயர் வைத்துள்ள நடிகர் விஜய் சேது

ரசிகனின் குழந்தையை தூக்கி கொஞ்சி, அந்த குழந்தைக்கு அழகான பெயர் வைத்துள்ள நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது துக்ளக் தர்பார், மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களில் நடித்துவரும் விஜய்சேதுபதி மும்பைகர் என்ற பெயரில் உருவாகி வரும் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி, சமீபத்தில் தருமபுரி மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் சிலம்புவின் ஆண் குழந்தைக்கு "துருவன்" என பெயர் வைத்துள்ளார். மேலும் குழந்தையை தூக்கி கொஞ்சி, அதற்கு முத்தமிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement