என்ன ஒரு ஆட்டம்! விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடனமாடும் வீடியோ காட்சி!

என்ன ஒரு ஆட்டம்! விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடனமாடும் வீடியோ காட்சி!


vijay sethupathi dancing in lady get up

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் பகத் பாசில், மிஸ்கின் சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

விஜய் சேதுபதி இந்த முயற்சி அவரால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை சினிமா உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. ஏற்கனவே பல தோற்றங்களில் வெற்றி படங்களை கொடுத்துள்ள விஜய் சேதுபதியின் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பின்போது இயக்குனர் தியாகராஜன் விஜய் சேதுபதிக்கு நடன அசைவுகளை சொல்லிக் கொடுக்கும் காட்சியை விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.