வாவ்.. என்னவொரு கியூட்டான வெட்கம்! சஷ்டியப்த பூர்த்தி புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் விஜய்யின் தந்தை!!

வாவ்.. என்னவொரு கியூட்டான வெட்கம்! சஷ்டியப்த பூர்த்தி புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் விஜய்யின் தந்தை!!


vijay-parents-80-yer-shapthapoorthi-pooja-photos-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.  அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 80 ஆவது பிறந்தநாளை மனைவி ஷோபனா உடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாக பூஜை செய்து, சஷ்டியப்த பூர்த்தி  செய்யப்பட்டுள்ளது. இதில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு பல யாகங்களைச் செய்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay

இந்த மணி விழா நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இதில் விஜய் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. மேலும் எஸ்.ஏ சந்திரசேகர் வெளியிட்ட இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

vijayvijayvijay