அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
"நீ அஜித் ரசிகன், என் படத்தில் நீ வேண்டாம்".. பிரேம்ஜியை படத்திலிருந்து விலக்கிய தளபதி.?
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதையடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவ்வப்போது படம் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டவண்ணம் உள்ளார். 'தளபதி 68' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கப் போவதாக தெரிய வந்துள்ளது.
விஜய்க்கு இரண்டு ஜோடிகள் எனவும், அதில் ஒரு ஹீரோயின் ரோலுக்கு பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும், இன்னொரு ரோலுக்கு சினேகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் விஜய் குறித்து பேசியுள்ளனர். அதில் பிரேம்ஜி, "உங்க அண்ணனும், நானும் பண்ற படத்துல நீ நடிக்க கூடாது. ஏன்னா நீ தல ஆளு தானே? என்று விஜய் நகைச்சுவையாக கூறியதாக பிரேம்ஜி பேட்டியில் கூறியுள்ளார்.