இயக்குனரான நான் நடிக்க ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் விஜய் தான்! கௌதம் மேனன் ஓபன் டாக்!

Vijay miltan gowtham menan


Vijay miltan gowtham menan

மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா போன்ற தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் பிரபல இயக்குனர் கௌதம் மேனன். இவரின் கதைகள் எப்போதுமே வித்தியமான ஸ்டைலில் தான் இருக்கும். இவரின் வித்தியாசமான ஸ்டைலிஸ் கதைகளுக்கு ரசிகர்களும் அதிகம்.

கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படம் திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களின் மனதில் ஒரளவுக்கு இடம் பிடித்தது.

Vijay miltan

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் இவர் இயக்கிய படங்களை ரசிக்கும் அளவுக்கு இவர் நடிக்கும் படங்களையும் ரசித்து வருகின்றனர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஓ மை கடவுளே மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் கௌதம் மேனனை தொடர்ந்து நடிக்குமாறும் கேட்டு வருகின்றனர்.

இது குறித்து கௌதம் மேனன் ஒரு பேட்டியில் கூறும் போது நான் நடிக்க வருவதற்கு முக்கிய காரணம் இயக்குனர் விஜய் மில்டன் தான். அவர் கொடுத்த தைரியத்தில் தான் நான் நடிக்க வந்தேன் என ஓபனாக கூறியுள்ளார்.