சினிமா

தளபதி விஜய்யா இது! மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் பார்த்தீர்களா! அசந்து போன ரசிகர்கள்

Summary:

மாஸ்டர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில்  கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதற்கிடையில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்த விஜய்யை அடையாளம் கண்ட ரசிகர்கள் தளபதி எவ்வளவு சிம்பிளாக இருக்கிறார் பார்த்தீர்களா? என பாராட்டி வருகின்றனர். 


Advertisement