சினிமா

இதுதான்யா நட்பு! கொரோனா பீதியில் இருந்த சஞ்சீவ்! அடுத்த நிமிஷமே ஓடிவந்து நம்ம தளபதி செய்த காரியத்தை பார்த்தீர்களா!

Summary:

Vijay help sanjeev in critical situation

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கென நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது நடிகர் விஜய் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் மிகவும் இனிமையானவர். தனது நண்பர்களுக்கும், நட்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடியவர். 

நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும் நடிகர் விஜய்க்கு  நண்பனாகவே பத்ரி, புதிய கீதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

 இந்நிலையில் சமீபத்தில் இணையதள பேட்டி ஒன்றில் நடிகர் சஞ்சீவ், விஜய் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். நடிகர் சஞ்சய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த பீதியில் தனது மனைவி மற்றும் குழந்தையை அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது அவரிடம் போனில் பேசிய நடிகர் விஜய், சஞ்சீவ் தனியாக இருப்பது தெரிந்ததும் அடுத்த 15 நிமிடங்களிலேயே மதிய உணவு எடுத்து கொண்டு சஞ்ஜீவ்  வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் சஞ்ஜீவ் தனக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் வெளியே வர மறுத்த நிலையில், விஜய் சாப்பாட்டை செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளாராம். இது தனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்ததாக சஞ்சீவ் உற்சாகத்துடன் கூறியுள்ளார்.


Advertisement