சினிமா

என்னது, இவர்தான் முதல்வன் 2 படத்தில் ஹீரோவா? வெளியான தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Summary:

vijay have chance to act in mudhalvan 2

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் நடித்து திரைக்கு வந்த படம் முதல்வன்.

மேலும் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகி, நாட்டில் நடக்கும் ஊழலை ஒழிப்பதுபோல், திரைக்கதை அமைக்கப்பட்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் சுமார் 19 வருடங்கள் கழித்து, அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியன்-2 படத்திற்கான வேலைகள் நிறைவடைந்ததும்,  முதல்வன்-2 பட வேலைகளை இயக்குனர் ஷங்கர் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

mudhalvan 2 க்கான பட முடிவு

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கரிடம் முதல்வன்-2 படத்தை எடுத்தால் கதாநாயகன் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு ஷங்கர் “ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் விரும்பினால் அவர்களை வைத்து எடுப்பேன். அவர்கள் இல்லையென்றால் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று ஷங்கர் பதில் அளித்தார்.இந்நிலையில் ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளதால் முதல்வன் ௨ படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 


Advertisement