சினிமா

தளபதி விஜய்யின் அசத்தலான அடுத்த பிளான்! ரசிகர்களை குஷியாக்கிய மாஸ் செய்தி! என்னனு உங்களுக்கு தெரியுமா?

Summary:

நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் அவர்கள் விஜய் நற்பணி மன்றங்கள், மக்கள் இயக்கம் அமைத்து அதன்மூலம் கஷ்டப்படுவோர்  பலருக்கும் ஏராளமான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை தொடங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் நடிகர் அதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்த கட்ட நடவடிக்கையாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்க முடிவு செய்துள்ளதாகவும்,  அதன்மூலம் விஜய் மக்கள் இயக்கம் செய்யும் நற்பணிகள் குறித்தும், நடிகர் விஜய் தொடர்பான தகவல்களை குறித்தும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.


Advertisement