படம் வெளியாகுமானு தெரியல! கண்கலங்கிய நடிகர் விஜய்! கண்ணீர் சிந்திய ரசிகன்!
படம் வெளியாகுமானு தெரியல! கண்கலங்கிய நடிகர் விஜய்! கண்ணீர் சிந்திய ரசிகன்!

தமிழ் சினிமாவின் தளபதி, தென்னிந்திய சினிமாவின் அடையாளம் தளபதி விஜய். தனக்கென பலகோடி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் விஜய். இந்நிலையில் நாளை காலை சர்க்கார் படம் வெளியாக உள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் சர்க்கார். படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் தனது ரசிகர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் தளபதி விஜய். மேடைப்பேச்சுகளிலும் சரி, சினிமாவிலும் சரி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஏதாவது அறிவுரைகளை வழங்குவது வாடிக்கையான ஒரு விஷயம்தான். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நபரும் இளைஞர் அணி தலைவருமான இ சி ஆர் சரவணன் நடிகர் விஜயுடன் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பொதுவாக விஜய் படம் வெளியாகும் முதல்நாள் இரவு விஜய் அணைத்து திரை அரங்கிற்கு காரில் ஒரு விசிட் அடிப்பது உண்டு. அதுபோன்று காவலன் படம் வெளியாக இருந்த முதல்நாள் இரவு 2 மணிக்கு நான் போஸ்டர் ஓடிக்கொண்டிருந்தேன் அப்போது அந்த வழியாக வந்த விஜய் காரை நிறுத்தி என்னிடம் பேசினார். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மணி 2 ஆச்சு இப்போ போஸ்டர் ஒட்டி கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு நான், இல்லைனா படம் ரிலீஸ் ஆகுமானு தெரில என்று கண்கலங்கி அவரிடம் பேசினேன். பின்னர் அவரும் கொஞ்சம் கலங்கியவாறு ‘படம் கண்டிப்பா வெளியாகும் இப்போ வீட்டுக்கு போங்க என்று கூறினார். அவர் என்னிடம் காரை நிறுத்தி பேச வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், தனது ரசிகருக்காக அவர் இதனை செய்தார். அந்த அளவிற்கு ரசிகர்கள் மீது பாசம் உள்ளவர் நமது தளபதி விஜய். ஒவொரு தளபதி ரசிகனும் நினைத்து பெருமைப்பட வேண்டிய தருணம் இது.