சினிமா

அடேங்கப்பா! நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு ரசிகரா? என்ன செஞ்சிருக்கார்னு நீங்களே பாருங்க!

Summary:

Vijay fan cycle trip from chennai to kanyakumari for sarkar movie

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் மிக பிரமாண்டமாய் தயாராகிவரும் சர்க்கார் திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. படம் முழுவதும் அரசியல் வசனங்கள் பேசப்பட்டிருப்பதால் படம் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் ராதா ரவி, பழ கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் 
தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். விஜய் படம் வருகிறதென்றால் எப்போதும் திருவிழா போல தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.


சில ரசிகர்கள் போஸ்டர், பேனர், கட்அவுட் வைப்பது என தற்போது அமர்களப்படுத்திவரும் வேளையில், மற்றொரு விஜய் ரசிகர் விஜய் படத்திற்காக வித்யாசமான ஒரு விஷயத்தை செய்துள்ளார்.


சர்கார் திரைப்படம் வெள்ளிவிழா காண சென்னையை சேர்ந்த வாலிபர் ஜோ என்பவர் சைக்கிளில் கன்னியாகுமரி வரை பயணம் மேற்கொண்டுள்ளார். இவரின் பயணம் தற்போது புதுச்சேரியை தொட்டுள்ளது. 


Advertisement