லைகர் படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் தேவரகொண்டா எடுத்த முடிவு... அடுத்து நடிக்கப் போகும் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?!

லைகர் படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் தேவரகொண்டா எடுத்த முடிவு... அடுத்து நடிக்கப் போகும் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?!vijay-devarkondas-decision-after-liger-movie

விஜய் தேவர்கொண்டா தெலுங்கு திரையுலகில் பெயர் பெற்ற நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
நோட்டா என்ற தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். இந்த படம் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.

மேலும் 2018-ம் வருடம் பரசுராம் என்ற இயக்குநரின் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா நடித்து 'கீதா கோவிந்தம்' படம் வெளியானது. படத்தில் கோபி சுந்தர் என்பவர் இசையில் 'இன்கேம் இன்கேம் காவலே' பாடல் பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

விஜய் தேவர்கொண்டா
இதுபோன்ற நிலையில் விஜய் தேவரகொண்டா 'கீதா கோவிந்தம்' பட இயக்குநரான பரசுராம் உடன் இணைந்து அடுத்த படம் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தில்ராஜு என்பவர் தயாரிக்கும் படத்தில் படகுழுவினர், நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் கூறப்படும் என தெரிகிறது.

விஜய் தேவர்கொண்டா
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தராததால் மிகவும் கவனத்துடன் படக்கதைகளைத் தேர்வு செய்து வருகிறார். மேலும் இவர் நடித்து குஷி, ஜன கன மன, போன்ற தெலுங்கு திரைபடங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.