சினிமா

என்னது! நடிகர் விஜய்யின் சித்தி இந்த விஜய் டிவி சீரியலில் நடித்துள்ளாரா! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Summary:

நடிகர் விஜய்யின் சித்தி ஷீலா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய்கெனவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் அவரது நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இவ்வாறு கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தம்பி விக்ராந்த்.  அதாவது விஜய்யின் சித்தி மகன் ஆவார். அவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அவர் தனது திறமையால், உழைப்பால் முன்னேறி கோரிப்பாளையம், கவண், தொண்டன் என ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலா. இவர் விஜய்யின் அம்மா ஷோபாவின் தங்கை ஆவார். ஷீலா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது குறித்து அறிந்த ரசிகர்கள் தற்போது அதனை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
 


Advertisement