எனக்கு அதில் விருப்பமே இல்லை.! ஆனால்.. உதயநிதி ஸ்டாலின் முடிவு குறித்து மனம்திறந்த விஜய் ஆண்டனி!!

எனக்கு அதில் விருப்பமே இல்லை.! ஆனால்.. உதயநிதி ஸ்டாலின் முடிவு குறித்து மனம்திறந்த விஜய் ஆண்டனி!!


vijay-antony-talk-about-udhayanidhi-stalin-releave-from

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர்களுடன் மாமன்னன் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அதில் நடிகர் கமல், பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், சிவகார்த்திகேயன், சூரி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Mamannan

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி கூறியதாவது, மாரி செல்வராஜின் முதல் படம் 'பரியேறும் பெருமாள்'. அதன் மூலம் அவர் தலைச்சிறந்த இயக்குனர் என நிரூபித்துவிட்டார். உதயநிதி ஸ்டாலின் பெரிய இடத்தில் பிறந்திருந்தாலும், எந்த பாகுபாடும் இல்லாமல் வெளிப்படையாக இருக்ககூடியவர். பழகுவதற்கு மிக எளிமையான மனிதர். 'மாமன்னன்' அவரது கடைசி படம் என கூறுகிறார்கள். அதில் எனக்கு விருப்பமே இல்லை. ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக அவர் சினிமாவை விட்டு செல்கிறார் என கூறுவதால் அவரை வாழ்த்தி அனுப்ப வேண்டிய சூழ்நிலை என கூறியுள்ளார்.