சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய்..? வெளியே கசியும் மரண மாஸ் அப்டேட்..!

Summary:

Vijay and Logesh Kanakaraj join again in Vijay 66

மாநகரம், கைதி என்ற இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மாறினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். 

இதன் வெற்றியாக பிரபல தமிழ் நடிகர் விஜய் அவர்களை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு கிடைத்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இளமையான தோற்றத்தில் நடிகர் விஜய் ...

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் தனது 66வது படத்தில் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களுடன் கூட்டணி சேர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் அடுத்த வருடம் தொடங்கி அடுத்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேநேரம் ஏ ஆர் முருகதாஸ் படத்திற்குப் பிறகு விஜய் தனது 66வது படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் இறுதியில் துவங்கி 2022ல் முடிவடையும் எனத்தெரிகிறது.


Advertisement