"இங்க இருந்து காப்பியடிக்க வேணாம்.. இங்க வந்தே எடுங்க" அட்லீயை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.!
KRK சக்ஸஸ்.. காதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!
KRK சக்ஸஸ்.. காதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மேலும் இருவரும் கோவிலுக்கு செல்வது, சுற்றுலா செல்வது என மிகவும் நெருக்கமாக பிசியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனை தொடர்ந்து தற்போது, விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் சீரடி சாயிபாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, கண்மணியுடன் சீரடி சாயிபாபாவை சந்தித்து விட்டு வருவதாக பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.