மீண்டும் சிக்கலில் விடாமுயற்சி.? வெளியான புதிய தகவல்.!



Vidamuyarchi latest update

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் "விடாமுயற்சி". இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட பிறகு நீண்ட காலமாக படம் குறித்து வேறு எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மன சோர்வில் இருந்து வந்தனர்.

Ajith

ஏனென்றால் அஜித் தனது பைக்கில் உலகப் பயணம் சென்று இருந்ததால் படம் தாமதமானதாக தகவல் வந்தது. மேலும் படம் கைவிடப்படுவதாகவும் வதந்திகள் பரவின. இதையடுத்து அஜித் சென்னை திரும்பிய பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்போவதாக செய்திகள் வெளியாகின.

அதன்படி, தற்போது அசர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது படப்பிடிப்பை தொடர்வதில் மீண்டும் சிக்கல் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Ajith

இஸ்ரேல் நாட்டில் போர் நடந்து வருவதால், அதன் தாக்கம் அரபு நாடுகளிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் விடாமுயற்சி படப்பிடிப்பை தொடர்ந்து அங்கு நடத்த முடியாது என்று கூறப்படுகிறது. ஆனாலும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாததால் ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியில் உள்ளனர்.