கொரோனா வைரஸால் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வந்த சோதனை! கடைசியில் இப்படி ஆச்சே!

Varimaran suri


Varimaran suri

தமிழ் சினிமாவில் முதன்முதலில் நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் வெற்றிமாறன்.அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பல வித்தியாசமான படங்களை இயக்கியுள்ளார். 

அதன் பின்பு இவர்  2011 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து மீண்டும் ஆடுகளம் என்ற திரைப்படத்தை இயக்கினார். அப்படம் வெற்றி மாறனுக்கு தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

Suri

மேலும் இவர் சிறந்த இயக்குனராக மட்டுமின்றி சிறந்த தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளார். அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை, அசுரன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகர் சூரியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. மேலும் அப்படம் முழுவதும் கத்தார் நாட்டில் நடக்கவிருந்தது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பயத்தால் வெற்றிமாறனின் கனவு களைத்துள்ளது. 

பிரபலங்கள் அனைவரும் வெளிநாட்டிற்கு செல்ல அஞ்சுவதால் அப்படத்தின் கதையை சிறிது மாற்றி இங்கேயே சில காட்சிகளை எடுக்கவுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.